சென்னை: கீழ்பாக்கம் ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு தொடங்கியது. திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டை பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். 50 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த வழக்கறிஞர்களான நினைவில் வாழும் தி.மு.க. முன்னாள் பொருளாளர் எஸ்.ஜே.சாதிக் பாட்ஷா, பிடிஆர் பழனிவேல் ராஜன், ஏ.எல்.சுப்ரமணியம், அ.அ.ஜின்னா ஆகியோர் பெயரில் தோரண வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது.
The post திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டை தொடங்கி வைத்தார் பொதுச்செயலாளர் துரைமுருகன் appeared first on Dinakaran.