சென்னை: திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு அரசு பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில், நூற்றாண்டு விழா கண்ட ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விடுமுறை அளித்து, கடந்த 9-ம் தேதி, திமுக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றிருக்கிறது. திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப் பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.