காலே: இலங்கை – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை (6-ம் தேதி) காலே நகரில் தொடங்குகிறது. இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் திமுத் கருணரத்னே தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்டம் அவருக்கு 100-வது டெஸ்ட் போட்டி ஆகும். 36 வயதான கருணரத்னே 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 சதங்கள், 34 அரை சதங்களுடன் 7,172 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 ஆட்டங்களில் பங்கேற்று ஒரு சதம், 11 அரை சதங்களுடன் 1,316 ரன்கள் சேர்த்துள்ளார்.