விழுப்புரம்: எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தையும் பெற்று கொடுத்தது. இன்றைய நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான், என்று விழுப்புரம் அருகே வழுதரெட்டியில் நடந்த 21 சமூகநீதிப் போராளிகளுக்கான மணிமண்டபம், ஏ.கோவிந்தசாமியின் நினைவரங்க திறப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூக நீதிப்போராளிகளை போற்றும் வகையில், விழுப்புரம் அருகே வழுதரெட்டியில் ரூ.5.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தையும், ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கத்தை இன்று (ஜன.28) முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.