சென்னை: திராவிட இயக்க எழுத்தாளர் சு.விஜயபாஸ்கரின் அகால மரணம் அதிர்ச்சியளிக்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “சகோதரர் சு.விஜயபாஸ்கரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் திராவிட இயக்கத் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனவும் துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “திராவிட இயக்க எழுத்தாளர் சு.விஜயபாஸ்கரின் அகால மரணம் அதிர்ச்சியளிக்கிறது. ’உயர்ஜாதியினருக்கு 10% EWS இடஒதுக்கீடு சரியா? தவறா?’ என்னும் அவரது நூல் சமூகநீதியை அழுத்தமாகச் சொல்லும் ஆவணம்.
இளம் பேச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக கழக இளைஞர் அணி நடத்திய ‘என் உயிரினும் மேலான’ கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டியில் நடுவராகப் பங்கேற்று சிறப்பாகச் செயல்பட்டதுடன், இந்திய அளவிலான இடஒதுக்கீட்டின் வரலாற்றை விளக்கும் வகையில், முரசொலி பாசறைப் பக்கத்தில் ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்னும் தொடரையும் 57 வாரங்களாக எழுதி வந்தார்.
அவருடைய மரணம், நம் திராவிட இயக்கத்துக்கும் சமூகநீதி எழுத்துக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. சகோதரர் சு.விஜயபாஸ்கரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் திராவிட இயக்கத் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
The post திராவிட இயக்க எழுத்தாளர் சு.விஜயபாஸ்கரின் அகால மரணம் அதிர்ச்சியளிக்கிறது: துணை முதலமைச்சர் இரங்கல் appeared first on Dinakaran.