திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் கிராமத்தில் திறந்தவெளியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் மற்றும் சேமிப்பு கிடங்கை, 10 ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்தி மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் உள்ளன. இதில், கரும்பு, நெல் மற்றும் பல்வேறு காய்கறிகள் சாகுபடிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், விவசாயிகள் பெரும்பாலும் நெற் பயிரை அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.