திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே போகி மேளம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள அருந்ததியர் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் மேளத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்கு முன்பு பழைய பொருட்களை எரிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் போகி மேளம் கொட்டி மகிழ்வார்கள் பல கிராமங்களில் தற்போதும் இந்த நடைமுறை உள்ளது.
இதற்காக திருக்கழுக்குன்றம் அருகே உள்ள கொத்திமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் புற கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாரம்பரிய முறையில் போகி மேளங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் மேளத்தால் பாரம்பரியமாக தயாரிக்கப்படும் போகி மேளம் விற்பனை குறைந்துள்ளதாக அருந்ததியர் புறம் கிராமத்தில் இந்த தொழிலில் ஈடுபட்டுவரும் குடும்பங்கள் கவலை தெரிவிக்கின்றனர். பொங்கல் சீசன் காலத்தில் அரசு முன்தொகையாகவோ அல்லது கடனாகவோ பணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்தால் மேளம் தயாரிப்பு தொழில் மேலும் சிறப்பாக இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
The post திருக்கழுக்குன்றம் அருகே மேளம் தயாரிப்பு பணியில் அருந்ததியர்: பிளாஸ்டிக் மேளத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பு எனப் புகார் appeared first on Dinakaran.