Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: திருச்சியில் ரூ.2,415.84 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • நியூஸ் 7 டிவி நேரலை
  • புதிய தலைமுறை டிவி
  • நியூஸ் 18 தமிழ்நாடு
  • சத்தியம் செய்திகள்
  • கலைஞர் செய்திகள்
  • ஜெயா நியூஸ்
  • பிபிசி தமிழ் நியூஸ்
  • மக்கள் டிவி நேரலை
  • தந்தி நியூஸ் டிவி
  • சன் நியூஸ் டிவி
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Have an existing account? Sign In
Home » Blog » திருச்சியில் ரூ.2,415.84 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
Dinakaran Tamilnadu

திருச்சியில் ரூ.2,415.84 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

EDITOR
Last updated: May 9, 2025 12:33 pm
EDITOR
Published May 9, 2025
Share
SHARE

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (9.5.2025) திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில், 1032 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் 7,122 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 527 கோடியே 63 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3,597 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 856 கோடியே 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,17,132 பயனாளிகளுக்கு வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், பஞ்சப்பூரில் 408 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவில் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம், 128 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவில் பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம், காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் 50 இலட்சம் ரூபாய் செலவில் வட்டார சுகாதார நிலையம், கூத்தப்பார் பேரூராட்சியில் 8 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் குடிநீர் வசதிகளை மேம்படுத்தும் பணிகள், மணப்பாறை நகராட்சியில் 7 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் வார காய்கறி சந்தை, ராவுத்தன்மேடு அரசு தொடக்கப்பள்ளியில் 1 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள், துவாக்குடி நகராட்சியில் 21 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் குடிநீர் பணிகள்;

பள்ளிக்கல்வித் துறை சார்பில், துவாக்குடியில் 19 கோடியே 33 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் திருச்சி மாவட்ட அரசு மாதிரி பள்ளி கட்டடம், 37 கோடியே 14 இலட்சம் ரூபாய் செலவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு மாதிரி பள்ளி மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள், ஊத்துக்குளி, துவரங்குறிச்சி, பழுவஞ்சி, இலால்குடி, மண்ணச்சநல்லூர், ஓமாந்தூர், திருப்பஞ்சீலி, திருவெள்ளரை, சி.அய்யம்பாளையம், காட்டுப்புத்தூர், இனாம்குளத்தூர், கீரிக்கல்மேடு, பி.மேட்டூர் ஆகிய அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 24 கோடியே 78 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் செலவில் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்;

பொதுநூலகத் துறை சார்பில், மணப்பாறை கிளை நூலகத்தில் 24 இலட்சம் ரூபாய் செலவில் நூலகக் கட்டடம், அலகரையில் 60 இலட்சம் ரூபாய் செலவில் புதிய நூலகக் கட்டடம்;

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இலால்குடியில் 4 கோடியே 52 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம்;

உயர்கல்வித் துறை சார்பில், திருவரங்கம் நவலூர்குட்டப்பட்டு அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 கோடி ரூபாய் செலவில் வகுப்பறைகளுடன் கூடிய கட்டடம்;

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் இலால்குடி அரசு மருத்துவமனையில் 17 கோடி ரூபாய் செலவில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலக்காப்பக கட்டடங்கள், திருநெடுங்குளம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 33 இலட்சம் ரூபாய் செலவில் செவிலியர் குடியிருப்பு, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 31 இலட்சம் ரூபாய் செலவில் தாய் மற்றும் பச்சிளங்குழந்தைகள் சிறப்பு கவனிப்பு பிரிவு, 58 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் கடுமையான கல்லீரல் பாதிப்புகளை மேலாண்மை செய்வதற்கான கருவி, 29 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவில் நீராவி சலவையகம் மற்றும் சிஎஸ்எஸ்டி வசதிகளை மேம்படுத்த உபகரணங்கள்;

பொதுப்பணித்துறை சார்பில், திருச்சிராப்பள்ளியில் 2 கோடியே 84 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் தலைமைப் பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்களுக்கு குடியிருப்புக் கட்டடம், திருச்சிராப்பள்ளி பொதுப்பணித்துறை பயிற்சியாளர் பயிற்சி நிலையத்தில் 98 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதி மற்றும் மேம்படுத்தப்பட்ட பணிகள், திருச்சிராப்பள்ளி பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகை 3 கோடியே 21 இலட்சம் ரூபாய்செலவில் புதுப்பிக்கப்பட்ட பணிகள், பொதுப்பணித்துறை திட்டம், வடிவமைப்புக் கோட்டம் மற்றும் உபகோட்ட அலுவலகங்களில் 28 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் சிறப்பு மராமத்துப் பணிகள்;

நீர்வளத் துறை சார்பில், வளையப்பட்டியில் தலையாறு வெளிப்போக்கியின் குறுக்கே 1 கோடி ரூபாய் செலவில் தடுப்பு அணை;

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், திருவெள்ளரை – ஓமந்தூர் சாலையில் 3 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் ஒருவழிப் பாதையிலிருந்து இருவழிப் பாதையாக அகலப்படுத்துதல், பலப்படுத்துதல் மற்றும் மதகுகளை புனரமைத்தல், வாளாடி – மேல பெருங்காவூர் சாலையை 65 இலட்சம் ரூபாய் செலவில் வலுப்படுத்தப்பட்ட பணிகள், புள்ளம்படி – திருமழபாடி சாலை முதல் கொள்ளிடக்கரை குரங்கணி சாலை வரை 95 இலட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தப்பட்ட பணிகள், காரைப்பட்டி – கஞ்சநாயக்கன்பட்டி சாலையை ஒரு வழி பாதையிலிருந்து இடைநிலை வழி பாதையாக 3 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தப்பட்ட மற்றும் பலப்படுத்தப்பட்ட பணிகள், சென்னை – திருச்சி – திண்டுக்கல் சாலையை (புறவழிச்சாலை) 1 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தப்பட்ட பணிகள், கரட்டாம்பட்டி முதல் இலுப்பையூர் – சாத்தனூர் சாலை சந்திப்பினை 49 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட பணிகள்;

தா.பேட்டை – மேட்டுப்பாளையம் சாலை சந்திப்பினை 60 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட பணிகள், நாமக்கல் – கண்ணனூர் சாலையை 2 கோடியே 37 இலட்சம் ரூபாய் செலவில் பலப்படுத்தப்பட்ட பணிகள், நெடுங்கூர் – நெய்குளம் பெருவளப்பூர் சாலை, மகிழம்பாடி சாலை – தருமனாநதபுரம் முதல் வெள்ளனூர் சாலை, கல்லக்குடி – முதுவத்தூர் சாலை, மேலரசூர் – மால்வாய் சாலை, தேவிமங்கலம் – மேலவங்கரம் – கீழவங்கரம் முதல் உப்பாற்றின் குறுக்கே, பூவாளூர் – சிறுகனூர் திருப்பட்டூர் சாலை, தத்தமங்கலம் – சாலைப்பட்டி சாலை, அணலை – உய்யகொண்டான் சாலையில் உய்யகொண்டான் கால்வாயின் குறுக்கே, கண்ணனூர் – காளியாம்பட்டி – பகளவாடி சாலை குண்டாற்றின் குறுக்கே ஆகிய இடங்களில் 33 கோடியே 2 இலட்சத்து 39 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்மட்டப் பாலங்கள்;

அய்யம்பாளையம்-அக்கரைப்பட்டி சாலையில் 1 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவில் தரம் மேம்படுத்தப்பட்ட பணிகள், வெங்கடாசலபுரம் முதல் புடலத்தி வரையிலான சாலை, புத்தூர் முதல் பாலகிருஷ்ணன்பட்டி வரையிலான சாலை, உப்பிலியபுரம் முதல் மாராடி வரையிலான சாலை ஆகிய சாலைகளில் 5 கோடியே 58 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் சாலை மேம்பாட்டுப் பணிகள், திருச்சிராப்பள்ளி நகர்ப்புற சாலைகள் 17 கோடியே 28 இலட்சம் ரூபாய் செலவில் இருவழிப்பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்துதல், பலப்படுத்துதல், இதில் வடிகால் கட்டுமானம், மைய மீடியன் கட்டுமானம், சிறுபாலம் புனரமைத்தல் மற்றும் தடுப்பு சுவர் கட்டுமானப் பணிகள்;

சட்டத்துறை சார்பில், திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரியில் 5 கோடியே 85 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர் அறைகள், 5 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் உள்விளையாட்டு அரங்கம், 5 இலட்சம் ரூபாய் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்;

வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், இலால்குடி மற்றும் புள்ளம்பாடி ஆகிய இடங்களில் 3 கோடியே 67 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் செலவில் சார் பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்;

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில், இலால்குடி, மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 4 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் சேமிப்பு கிடங்குகள்;

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், திருவரங்கம் கால்நடை மருந்தகத்திற்கு 48 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய கட்டடம்; தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 1 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பணிமனை;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 3 கோடியே 79 இலட்சம் ரூபாய் செலவில் மூன்று சுகாதார மையக் கட்டடங்கள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 56 இலட்சம் ரூபாய் செலவில் 4 பணிகள், குழந்தை நேயப் பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 3 கோடியே 55 இலட்சம் ரூபாய் செலவில் 10 பணிகள், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 40 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் 54 பணிகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 75 இலட்சம் ரூபாய் செலவில் 9 பணிகள்;

44 இலட்சம் ரூபாய் செலவில் பொது நூலகக் கட்டடங்கள், நபார்டு திட்டத்தின் கீழ் 7 கோடியே 47 இலட்சம் ரூபாய் செலவில் 41 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 29 கோடியே 41 இலட்சம் ரூபாய் செலவில் 11 பணிகள், ஊரக குடியிருப்புகள் பழுதுநீக்கம் திட்டத்தின் கீழ் 26 கோடியே 5 இலட்சம் ரூபாய் செலவில் 3648 பணிகள், கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 93 கோடி ரூபாய் செலவில் 3000 பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 15 கோடியே 78 இலட்சம் ரூபாய் செலவில் 102 பணிகள்;

என மொத்தம், 1032 கோடியே 15 இலட்சத்து 89 ஆயிரம் ரூபாய் செலவில் 7122 முடிவுற்றப் பணிகளை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், திருச்சிராப்பள்ளியில் 236 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி அமைக்கும் பணிகள், கல்லக்குடி மற்றும் பொன்னம்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் 11 கோடியே 99 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகள், மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் மேலசீதேவிமங்கலம் புள்ளம்பாடி, பாலகிருஷ்ணன்பட்டி பேரூராட்சியில் அய்யாறு அருகில் எதுமலையான், சிறுகமணி பேரூராட்சியில் உய்யங்கொண்டான் ஆகிய இடங்களில் 4 கோடியே 97 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலங்கள் அமைக்கும் பணிகள், மேட்டுப்பாளையம், பூவாளூர், கூத்தைப்பார் ஆகிய பேரூராட்சிகளில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்பம் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் அமைக்கும் பணிகள்;

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், துறையூரில் 4 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம்;

உயர்கல்வித் துறை சார்பில், திருச்சிராப்பள்ளி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4 கோடியே 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறைக் கட்டடங்கள், முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 4 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறைகளுடன் கூடிய கட்டடம், திருவரங்கம் சேதுராப்பட்டி அரசினர் பொறியியல் கல்லூரியில் 66 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வரைபட அறை;

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் 65 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிணவறை, துறையூர் அரசு மருத்துவமனையில் 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டடம்;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 61 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 63 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 66 பணிகள், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 44 கோடியே 9 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 18 பணிகள், 49 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுகாதார மையக் கட்டடம், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3000 பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 26 கோடியே 63 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 296 பணிகள், சிறுபாசன ஏரிகள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் 14 கோடியே 67 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 200 பணிகள்;

என மொத்தம், 527 கோடியே 63 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3,597 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 55,834 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், 75 பயனாளிகளுக்கு முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண, இயற்கை மரணம் மற்றும் கல்வி உதவித் தொகைகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் 44,148 பயனாளிகளுக்கு, மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு, நலிவுநிலை குறைப்பு நிதி, சமுதாய முதலீட்டு நிதி, தொழில் முனைவோருக்கான நுண் நிறுவன கடன் நிதி, இணை மானிய திட்டத்தின் கீழ் கடனுதவி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 1042 பயனாளிகளுக்கு மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல்இயந்திரங்கள்;

முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவு திட்டத்தின் கீழ் கடனுதவி, நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் கடனுதவி, தூய்மைப் பணியாளர் நலவாரிய அடையாள அட்டைகள்;

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 576 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் உதவிகள், முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வைப்பீடுத் தொகை பத்திரம், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரங்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 4024 பயனாளிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தில் நிதி உதவி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு அட்டைகள்;

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 162 பயனாளிகளுக்கு, மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உதவிகள், பால்வளத்தறை சார்பில் 500 பயனாளிகளுக்கு கறவை மாடு வாங்குவதற்கான கடனுதவி;

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 658 பயனாளிகளுக்கு, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன இயன்முறை உபகரணம், சிறப்பு சக்கர நாற்காலிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசிகள், நவீன காதொலி கருவிகள், பிரெய்லி கை கடிகாரங்கள் போன்ற உதவிகள், கூட்டுறவுத் துறை சார்பில் 504 பயனாளிகளுக்கு மகளிருக்கான சுய உதவி குழு கடன் உதவிகள்;

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 2,578 பயனாளிகளுக்கு மக்காச்சோளம் செயல்விளக்க திடல் அமைப்பதற்கான விதை மற்றும் இடுபொருட்கள், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் உழவு மானியம், நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் இடுபொருட்கள், வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் உழவு இயந்திரங்கள், தோட்டக்கலைத் துறை சார்பில் 2000 பயனாளிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் உதவிகள், துளி நீரில் அதிக பயிர் திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசன கருவிகள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் பழக்கன்று தொகுப்பு, ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்டத்தில் காய்கறி விதை தொகுப்பு மற்றும் பழக்கன்று தொகுப்பு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 1000 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல்;

என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 856 கோடியே 5 இலட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 1,17,132 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.

The post திருச்சியில் ரூ.2,415.84 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்! appeared first on Dinakaran.

Share This Article
Facebook Email Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

கோவில் புளியோதரையில் கிடந்த பாம்பு – ஓசூரில் நடந்தது என்ன? யார் காரணம்?

EDITOR
EDITOR
May 8, 2025
திருச்சூர் பூரம் திருவிழாவில் பாரமேற்காவு, திருவம்பாடி கோயில்களின் யானை மீது முத்து மணிக்குடை மாற்றம்
விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு
சென்னையில் 6 வயது சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு தெருநாயால் பரபரப்பு
“அந்த நடிகை இப்படி பேசுவார் என எதிர்பார்க்கவில்லை” – சிம்ரன் விமர்சிப்பது யாரை?

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?