திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரை காளியம்மன் கோயில் பங்குனி தேர் திருவிழா கடந்த மாதம் 11ம் தேதி துவங்கியது. இதைதொடர்ந்து காப்பு கட்டுதல், பூச்சொரிதல், 1,000 பானையில் பொங்கல் வைத்தல், திருக்கதவு திறந்து சிறப்பு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேர் புறப்பாடு நேற்று துவங்கியது. அப்போது 31 அடி உயர பெரிய தேர், 30 அடி உயரம் கொண்ட மற்றொரு தேரை பக்தர்கள் தலையிலும், தோளிலும் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தனர்.
பெரிய தேரில் ஓலைப்பிடாரி அம்மனும், சிறிய தேரில் மதுரை காளியம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். நேற்றிரவு வானப்பட்டறை மைதானத்தை தேர் அடைந்தது. இதைதொடர்ந்து இன்று மாலை 4 மணியளவில் 2வது நாளாக தேரோட்டம் துவங்குகிறது. அப்போது எல்லை உடைத்தல் நிகழ்ச்சி, சிறப்பு பூஜை நடைபெறும். பின்னர் தேர்களை நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது தோளில் தூக்கி செல்வர்.
The post திருச்சி அருகே 2வது நாளாக இரு தேர்களை தோள்களில் சுமந்து பக்தர்கள் வீதியுலா appeared first on Dinakaran.