*கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி அருகே திருத்தங்கூர் கிராமத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இயந்திர நடவு பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
திருத்துறைப்பூண்டி வட்டாரம் திருத்தங்கூர் கிராமத்தில் சங்கர் கணேஷ் என்பவர் வயலில் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த் குறுவை தொகுப்பு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இயந்திர நடவு பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது விவசாயிகளிடம் குறுவை சாகுபடிக்காக பயன்படுத்தப்படும் விதை ரகங்கள் மற்றும் நீர் தேவை, நேரடி நெல் விதைப்பு மற்றும் இயந்திர நடவின் பயன்கள் ஆகியவைகளை குறித்து கேட்டறிந்தார்,ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் உடன் இருந்தார்.
மேலும் திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பால சரஸ்வதி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் வேளாண்மை துணை இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா மற்றும் திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இய க்குனர் தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆய்விற்கான ஏற்பாடுகளை துணை வேளா ண்மை அலுவலர் ரவி, உதவி வேளாண்மை அலுவலர் ஸ்ரீதரன் ஸ்வாதி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்தி ஆகியோர் மேற்கொண்டனர்.
The post திருத்துறைப்பூண்டி அருகே திருத்தங்கூர் குறுவை தொகுப்பு திட்டத்தில் இயந்திர நடவு appeared first on Dinakaran.