ஆவடி: திருநின்றவூர் நகராட்சி, 20வது வார்டு, லஷ்மி நகரில் ரூ.31 லட்சம் மதிப்பில் புதிய பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. இதேபோல் திருநின்றவூர் நகராட்சி 2வது வார்டு சம்பங்கிநகர், செல்வராஜ் நகர், ஜான்சன் பள்ளி தெரு, லட்சுமிபுரம் 6வது பிரதான சாலை, 3வது வார்டு லட்சுமிபுரம் 12வது பிரதான சாலை, லட்சுமிபுரம் 1வது பிரதான சாலை, 6வது வார்டு திருநின்றவூர் நகராட்சி, முருகேசன் நகர் ஆகிய பகுதிகளில் ரூ.65 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட 63 கேவிஏ திறன் கொண்ட 2 மின் மாற்றி, 25 கேவிஏ கொண்ட 10 மின்மாற்றி என மொத்தம் 12 மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பூங்கா மற்றும் மின்மாற்றிகளை திறந்து வைத்தார். இதில் திருவள்ளூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர், செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் ஜீவானந்தம், உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, போர்மேன் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜே.ரமேஷ், நகரச் செயலாளர் தி.வை.ரவி, நகர்மன்ற தலைவர் உஷாராணி ரவி, துணைத் தலைவர் சரளா நாகராஜன், நகராட்சி ஆணையர் கீர்த்தனா, இலக்கிய அணி அமைப்பாளர் பி.எல்.ஆர் யோகா, தேவி யோகா, பொறியாளர் அணி அமைப்பாளர் மோகன், இளைஞரணி துணை அமைப்பாளர் பிரசன்னா மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், மின்சார வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
The post திருநின்றவூர் நகராட்சியில் புதிய பூங்கா, 12 டிரான்ஸ்பார்மர்கள்: அமைச்சர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.