திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். விடுமுறை நாளுக்கு மாற்றாக ஏப்ரல் 26 ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் என்று நெல்லை ஆட்சியர் சுகுமாறன் தகவல் தெரிவித்துள்ளார். அரசு பொதுத்தேர்வுகளுக்கு இடையூறு ஏறப்டாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட உள்ளது என்று திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருநெல்வேலி கலெக்டர் சுகுமார் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பங்குனி உத்திர திருநாள் (பங்குனி 28) 11.04.2025 வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்ட உள்ளது. இதையொட்டி திருநெல்வேி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் அரசு பொதுத்தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.
மேற்படி 11.04.2025 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத்தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும். மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படிவல்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூல் மற்றுமு் அனைத்து சார்நிலை கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் தொரட்பாக அவசர பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
The post திருநெல்வேலி மாவட்டத்துக்கு பங்குனி உத்திர திருநாளையொட்டி ஏப்ரல் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.