திருப்பதி: திருப்பதியில் கூட்ட நெரிசலால் உயிரிழப்பு ஏற்பட்ட இடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.
நேற்று இரவு கூட்ட நெரிசல் ஏற்பட்ட விஷ்ணு நிவாசம் பகுதியில் பக்தர்களுக்கு டிக்கெட் விநியோகிக்கப்பட்டது. வரிசையில் ஒருவர் பின் ஒருவராக பக்தர்கள் வருவதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும், பக்தர்களின் வருகையை ஒழுங்குபடுத்தவும், கூட்ட நெரிசலைத் தடுக்கவும் முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.