திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பை முன்வைத்து, ‘தாகு மஹாராஜ்’ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். இதில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.