அமராவதி: திருப்பதியில் வைகுண்ட ஏகாதேசி தரிசனத்துக்காக டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
திருப்பதி மாவட்டத்துக்கு பொறுப்பானவரும், மாநில வருவாய்த் துறை அமைச்சருமான அநகனி சத்ய பிரசாத், சக அமைச்சர்களுடன், நெரிசல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவரும் எஸ்விஐஎம்எஸ் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அவர் இந்த நிவாரண நிதி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.