சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, வட மாநிலங்களில் இருந்து வந்த சமணர்கள் மதுரையின் பல பகுதிகளிலும் தங்கினர் என இந்து சமய அறநிலையத் துறையின் வழக்கறிஞர் குறிப்பிட்டார். மதுரைக்கும் சமணத்திற்கும் என்ன தொடர்பு?

