சென்னை : மதுரை திருப்பரங்குன்றம் மலை இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளதாக பரவும் தகவல் வதந்தி என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிப்பார்ப்பகம் தெரிவித்துள்ளது. அதில் வெளியான விவரம்,
பரவும் செய்தி
“மதுரை திருப்பரங்குன்றம் மலை இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதை வக்ப் வாரியத்துக்குச் சொந்தமானதாக மாற்றும் முயற்சிகள் நடக்கிறது” என்று பெண் ஒருவர் பேசும் காணொளி பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
இது முற்றிலும் பொய்யான தகவல்.
*திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள நெல்லித்தோப்பு 33 சென்ட் அங்கிருந்து தர்ஹா செல்லும் படிகள், புதிய மண்டபம். தர்ஹா இடம், வரிவிதிப்புகளுக்கு உட்பட்ட இடம் தவிர்த்து மலை மற்றும் மலையைச் சுற்றியுள்ள இடங்கள் திருக்கோயிலுக்குச் சொந்தமானவை என்று மதுரை சார்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து, அதை லண்டன் பிரிவு கவுன்சில் உறுதியளித்துள்ளது. அதன்படி மலைமீது அமைந்துள்ள நடைபாதையை காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களும். தர்ஹா செல்லும் பக்தர்களும் பயன்படுத்தி வருகிறார்கள்” என்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் துணை ஆணையர் விளக்கமளித்துள்ளார்.
The post திருப்பரங்குன்றம் மலை இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளதாக பரவும் தகவல் வதந்தி : தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.