மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி தாக்கலான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. இப்பிரச்சினை தொடர்பாக இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து அமைப்பினர் மற்றும் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோயில் 16 கல் மண்டபம் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.