சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். முன்னதாக ரூ.30 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட நிலையில், தற்போது அது ரூ.1 கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிப்புரிந்துவந்த சண்முகவேல் (வயது 57) மற்றும் ஆயுதப்படைக் காவலர் அழகுராஜா ஆகிய இருவரும் நேற்று (05.08.2025) இரவு 11.00 மணியளவில் ரோந்துப் பணிக்குச் சென்றுள்ளனர்.