திருப்பூர்: திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்து ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்த 15 வங்கதேச இளைஞர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் 98 வங்கதேசத்தவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போல போலி ஆதார் அட்டை கொடுத்து இங்குள்ள ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் வேலைக்கு சேர்வதாக போலீசார் தெரிவித்தனர்.
The post திருப்பூரில் சட்ட விரோதமாக வேலை செய்து வந்த 15 வங்கதேச இளைஞர்கள் கைது appeared first on Dinakaran.