திருவள்ளூர்: திருமழிசை – ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய மாநில நெடுஞ்சாலையாகும். இந்த நெடுஞ்சாலையை திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தொழிற்சாலை வாகனங்கள், கார்கள், வேன்கள், அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், லாரிகள், பெரும்பாலான கனரக வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாலையில் இரண்டுபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை மற்றும் கட்டுமானத்துறை, சிறுமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவின்படி, திருவள்ளூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் து.சிற்றரசு மேற்பார்வையில், திருவள்ளூர் உதவி கோட்ட பொறியாளர் எஸ்.ஜெ.தஸ்னவிஸ் பெர்னாண்டோ, உதவி பொறியாளர் அரவிந்த் ஆகியோர் தலைமையில், திருமழிசை – ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் இரண்டுபுறமும் வளர்ந்துள்ள செடிகள் மற்றும் மையத் தடுப்புகளில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாகனங்களில் இருந்து வரும் புகை மற்றும் தூசியினால் மையத் தடுப்பானது பொலிவிழந்து காணப்படுவதால் மையத் தடுப்புகளிலும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது.
The post திருமழிசை – ஊத்துக்கோட்டை: நெடுஞ்சாலையில் வர்ணம் பூச்சு appeared first on Dinakaran.