மதுரை: மதுரை எஸ்பி அரவிந்திடம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் புகார் மனு அளித்தார். அதில், ‘‘மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சவுத்ரி, தனது சமூக வலைத்தள பக்கத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி குறித்து அவதூறு செய்தியும், கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவனுக்கு கொலை மிரட்டலும் விடுத்து பதிவிட்டுள்ளார். சாதி மோதலை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ள சவுத்ரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தார்.
இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு எஸ்பி பரிந்துரைத்தார். இதையடுத்து உசிலம்பட்டியைச் சேர்ந்த சவுத்ரி மீது, மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.