விருத்தாசலம்: திருவனந்தபுரம் – எழும்பூர் செல்ல வேண்டிய ரயில் விருத்தாசலத்தில் நிறுத்தப்பட்ட நிலையில் 3 மணிநேரமாக ரயிலில் தவித்த 1000 பயணிகள் இறக்கிவிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், தற்போது ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இந்நிலையில், நேற்று 15 பெட்டிகளில் 1000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட ரயில் இன்று காலை சென்னை எழும்பூர் வரவிருந்தது. இதையடுத்து கனமழை காரணமாக ரயில்வே பாலத்தில் அபாய அளவை தாண்டி வெள்ளம் ஓடியது. இதனால் இன்று காலை 6.30 மணிக்கு விருத்தாசலம் வந்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் சுமார் 3 மணிநேரத்துக்கு பின்னர் அதாவது காலை 9.30 மணிக்கு ரயில் செல்லாது என பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் செய்வதறியாது தவித்தனர். பின்னர் பயணிகள் பேருந்துகள் மற்றும் கார் வழியாக சென்னை புறப்பட்டனர். இதையடுத்து ரயில் திடீர் ரத்து என தெற்கு ரயில்வே அறிவிப்பால் பயணிகள் செய்வதறியாது தவித்த நிலையில், பயண கட்டணத்தை தெற்கு ரயில்வே வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருவனந்தபுரம் – எழும்பூர் ரயில் விருத்தாசலத்தில் நிறுத்தம்: 3 மணிநேரமாக ரயிலில் தவித்த பயணிகள் appeared first on Dinakaran.