திருவள்ளூர்: பாஜவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் தேர்வுக்கான விருப்ப மனு நேற்று முன்தினம் பெறப்பட்டது. இந்த விருப்ப மனுவை, தற்போதைய மாவட்ட தலைவர் எம்.அஸ்வின் (எ) ராஜசிம்ம மகேந்திரா, மாவட்ட பொது செயலாளர்கள் கருணாகரன், ஆர்யா சீனிவாசன் ஆகியோர், மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ், மாவட்ட தேர்தல் பார்வையாளர்களான பாஸ்கர், மாநில தொழில் பிரிவுத்தலைவர் பாஸ்கர், மாநில அரசு தொடர்பு பிரிவு தலைவர் பாஸ்கர் ஆகியோரிடம் வழங்கினர்.
இதற்கான, முடிவுகளை நேற்று திருவள்ளூர் – ஆவடி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் காணொலி மூலம் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இந்த, அறிவிப்பில் தறபோதைய மாவட்ட தலைவர் எம்.அஸ்வின் (எ) ராஜசிம்ம மகேந்திராவை, மீண்டும் தேர்வு செய்ததாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அப்போது எம்.அஸ்வின் (எ) ராஜசிம்ம மகேந்திராவுக்கு, மாநிலச் செயலாளர் ஆனந்த பிரியா மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் மாலைகள், சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
The post திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜ தலைவர் தேர்வு appeared first on Dinakaran.