திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இரு வழித்தடங்கள் சீரமைப்பு பணி நிறைவு பெற்று, விரைவு மற்றும் மின்சார ரயில் சேவை தொடங்கியுள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்து, இரு என்ஜின்களுடன் கூடிய 52 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் ஒன்று, நேற்று அதிகாலை வாலாஜா சைடிங்கு சென்று கொண்டிருந்தது. 50 டேங்கர்களில் பெட்ரோல், டீசல் நிரப்பி கொண்டு சென்று கொண்டிருந்த அந்த ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக 18 டேங்கர்கள் அடுத்தடுத்து தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. விபத்தில் டேங்கர்கள் ஒன்றோடு ஒன்று உரசி, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.