*உயர்கல்வி துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்
திருவிடைமருதூர் : திருவிடைமருதூர் அருகே ஏனநல்லூர் கிராமத்திற்கு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் சார்பில் பேருந்து சேவையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மண்டலம் சார்பில் கும்பகோணம்-2 கிளை தடம் எண்.A.49 கும்பகோணத்திலிருந்து ஆடுதுறை வழியாக சன்னாபுரம் வரை இயக்கப்பட்ட பேருந்தை பள்ளி மாணவ, மாணவியர்கள், மகளிர் விடியல் பயணத்தில் பயணம் செய்யும் பெண்களின் நலனுக்காக ஏனநல்லூர் வரை தட நீட்டிப்பு செய்த சேவையினை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.
செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அந்த பேருந்தில் ஏறி நாச்சியார்கோவில் வரை பயணம் செய்தனர்.அப்போது அவர் பேசியதாவது:
பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு அவர்களுடைய சிரமத்தை போக்குகின்ற வகையில் ஏனநல்லூர் கிராமத்திற்கு பேருந்து வசதியினை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியுள்ளார்.
மேலும் திருவிடைமருதூர் தொகுதிக்கு ஒரு அரசு கல்லூரியும், கும்பகோணம் தொகுதிக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகத்தையும் வழங்கி பெருமை சேர்த்துள்ளார். இந்த அறிய வாய்ப்பினை ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் முத்துச்செல்வம், கூகூர் அம்பிகாபதி, அண்ணாதுரை, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சரவணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் பொது மேலாளர் முத்துக்குமாரசாமி, துணை மேலாளர்(வணிகம்) ராஜேஷ், கும்பகோணம்-2 கிளை மேலாளர் சத்தியமூர்த்தி, உதவி பொறியாளர் ராஜா மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
The post திருவிடைமருதூரில் இருந்து ஏனநல்லூர் கிராமத்திற்கு பேருந்து சேவை appeared first on Dinakaran.