புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளாரான திலீப் தோஷி, மாரடைப்பு காரணமாக நேற்று லண்டனில் காலமானார். 77 வயதான அவர், தனது மனைவி கலிந்தி மகன் நயன், மகள் விசாகா ஆகியோருடன் வசித்து வந்தார்.
பிஷன் சிங் பேடியின் ஓய்வுக்கு பின்னர் 1979-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் திலீப் தோஷி அறிமுகமானார். 1983-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அவர், 33 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 114 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார்.