தில் ராஜு தயாரிக்கவுள்ள படத்தினை ‘மார்கோ’ இயக்குநர் ஹனிஃப் அதேனி இயக்கவுள்ளார்.
2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்த மலையாள படம் ‘மார்கோ’. வசூல் செய்த அளவுக்கு, அதன் ரத்தம் தெறிக்கும் காட்சிகளால் சர்ச்சையையும் உருவாக்கியது. இதன் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை தடை விதித்துள்ளது. மேலும், ஓடிடியிலும் நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.