டோக்கியோ: தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் தெரிவித்துள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து உலகநாடுகளுக்கு விளக்க இந்தியா சார்பில் தூதுக்குழுக்கள் சென்றுள்ளன. முதலில் ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு தூதுக்குழு சென்றுள்ளது. சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான ஒரு குழு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான், பாதுகாப்புக் குழுவின் தலைவர் அலி அல் நுவைமி மற்றும் அபுதாபியில் உள்ள பிற முக்கியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது, அதே நேரத்தில் ஜே.டி.(யு) உறுப்பினர் சஞ்சய் ஜா தலைமையிலான எம்பிக்கள் குழு ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் தகேஷி இவாயா மற்றும் டோக்கியோவில் உள்ள பிற தலைவர்களுடன் உரையாடியது. அப்போது இருநாடுகளும் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததாக தூதுக்குழு தலைவர்கள் தெரிவித்தனர்.
The post தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவுக்கு முழு ஆதரவு: ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறுதி appeared first on Dinakaran.