தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிபர் விளாடிமிர் புதின் வாக்குறுதி அளித்துள்ளார்.
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அன்றைய தினமே கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர் கூறும்போது, “பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்தியாவுக்கு ரஷ்யா எப்போதும் பக்கபலமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.