சென்னை: துணைவேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் மாநில அரசுடன் அதிகார மோதல் இல்லை என ஆளுநர் நடத்தும் துணைவேந்தர் மாநாட்டுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி தலைமையில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தனியார் மற்றும் அரசு பல்கலை கழகங்களின் துணை வேந்தர்களின் மாநாடு உதகையில் வரும் 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் அதிகாரம் சென்ற நிலையில், இது தொடர்பாக தற்போது விளக்கம் ஒன்றை ஆளுநர் மாளிகை தரப்பில் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் மாநில அரசுக்கும், கவர்னர் அலுவலகத்திற்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாக குறிப்பிட்டிருந்த தகவல்கள் தவறானது. துணைவேந்தர்கள் மாநாடு என்பது பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு நடத்தப்பட்டது. கல்வியில் சிறந்து விளங்க கூடிய கல்வியாளர்கள், தொழில் நிறுவனங்களில் சிறந்து விளங்கக்கூடியவர்கள், தற்போதைய தொழில் நுட்பங்கள் என்ன என்பதை பல்வேறு துறைகளை சார்ந்து உள்ள நிபுணர்கள், கல்வி நிலையங்கள் மற்றும் சாதனையாளர்கள் ஆகியோரிடம் ஆலோசித்து இந்த துணை வேந்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது.
அந்த மாநாட்டில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள், மாநாட்டுக்கான தலைப்புகளை தேர்தெடுப்பது தொடர்பாக இது பல மாதங்களாக நடைபெற கூடிய நிகழ்வு என்று இந்த விளக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 2022 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. உண்மைக்கு மாறான தகவல்கள் வெளியாவதாகவும், மாநாடு நடத்துவதற்கான நோக்கம் என்பது தற்போது உள்ள தொழில் நுட்பங்கள் மற்றும் இது சார்ந்த சாதனையாளர்கள், தொழில்நுட்பம் சார்ந்து பல்கலைக்கழகங்கள், பயிற்சிவிப்பார்கள் மூலமாக மாணவர்களுக்கு சென்று சேர்ப்பது மட்டுமே நோக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post துணைவேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் மாநில அரசுடன் அதிகார மோதல் இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம் appeared first on Dinakaran.