மதுராந்தகம்: உத்திரமேரூரில் துணை முதலல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 1000 பேருக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ அன்னதானத்தை வழங்கினார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றிய-பேரூர் திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா பேருந்து நிலையம் அருகில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார் பேரூர் செயலாளர் பாரி வள்ளல் அனைவரையும் வரவேற்றார். இதில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் பிரம்மாண்ட கேக்கினை வெட்டி, பொதுமக்களுக்கு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை அசைவ உணவுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், பேரூராட்சி மன்றத் தலைவர் சசிகுமார், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் இளமதி கோவிந்தராஜ், ஒன்றிய நிர்வாகிகள், கவுன்சிலர்கள், ஒன்றிய பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post துணை முதல்வர் பிறந்தநாள் விழா ஏழை எளியோருக்கு அன்னதானம்: சுந்தர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.