மதுரை: சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் கனகு (எ) கனகராஜ். இவர் பிரபல ரவுடி பினு என்பவரின் நெருங்கிய கூட்டாளி. இவர் மீது எண்ணூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மூன்று கொலை வழக்குகள் உள்ளன. இது தவிர பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. இவரது பெயர், சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் இருந்து வருகிறது. இவரை சென்னை சிறப்பு காவல்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் கனகராஜ் பதுங்கியிருப்பதாக சிறப்பு காவல்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு காவல்படையினர், நேற்று காலை மதுரை கரிமேடு போலீசாரின் உதவியுடன் தனியார் விடுதிக்கு சென்றனர். அங்கு கனகராஜ் தங்கியிருப்பதை உறுதி செய்த போலீசார், அவரது அறையை சுற்றிவளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்தனர். பின்னர் அவரை பலத்த பாதுகாப்புடன் சிறப்பு போலீஸ் படையினர் சென்னைக்கு காரில் அழைத்துச் சென்றனர்.
The post துப்பாக்கி முனையில் சென்னை ரவுடி கைது appeared first on Dinakaran.