‘துருவ நட்சத்திரம்’ வெளியீட்டு சமயத்தில் யாருமே உதவவில்லை என்று கவுதம் மேனன் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படம் பல்வேறு பிரச்சினைகளால் சில ஆண்டுகளாக வெளியாகாமல் உள்ளது. பலமுறை வெளியீட்டுக்கு முயற்சித்தும் திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. தற்போது மம்முட்டியை வைத்து மலையாள படமொன்றை இயக்கியுள்ளார். அப்படம் ஜனவரி 23-ம் தேதி வெளியாகவுள்ளது.