பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ் தன்னை விசாரணை என்ற பெயரில் தூங்கவிடாமல் துன்புறுத்தியதாகவும், அவதூறாகப் பேசியதாகவும், மிரட்டியதாகவும் நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான‌ ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கடந்த 3-ம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கப்பணமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கின‌. இதையடுத்து அதிகாரிகள் அவரை மார்ச் 24-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.