சென்னை: தூத்துக்குடியில் ஜூன் மாதம் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை திறக்கப்படும் என தலைமைச் செயல் அதிகாரி அறிவித்துள்ளார். வியட்நாமைச் சேர்ந்த வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார். அமெரிக்காவின் டெஸ்லா கார் தொழிற்சாலைக்கு சர்வதேச சந்தையில் போட்டியாக திகழ்வது வின்பாஸ்ட். தூத்துக்குடியில் கார் தொழிற்சாலை அமைக்க முதல்கட்டமாக வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.4276 கோடி முதலீடு செய்தது.
The post தூத்துக்குடியில் ஜூன் மாதம் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை திறக்கப்படும்: தலைமைச் செயல் அதிகாரி அறிவிப்பு appeared first on Dinakaran.