தூத்துக்குடி: தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கரில் ரூ.16 ஆயிரம் கோடியில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் என்ற நிறுவனம், மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கிறது. இந்த நிறுவனத்தில் வரும் ஜூன் மாதத்தில் மின்சார கார் உற்பத்தி துவங்க உள்ளது.
இந்நிலையில் வின்பாஸ்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு ஏப்ரல் 1ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் சில நாட்களாக தகவல்கள் பரவியது. இதை நம்பி தூத்துக்குடி, சென்னை, மதுரை, நெல்லை, தென்காசி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று அங்கு குவிந்தனர். நிறுவனத்தினர் ஆள் தேர்வு என்ற செய்தி வதந்தி என்று தெரிவித்ததையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
The post தூத்துக்குடி கார் ஆலையில் வேலை என தகவலால் திரண்ட இளைஞர்கள் appeared first on Dinakaran.