சென்னை: ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கைது செய்யவும் போலீஸார் ஆயத்தமாகி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விட்டதை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும், ஏற்கெனவே என்யூஎல்எம் திட்டம் மூலம் வழங்கப்பட்ட தூய்மைப் பணியை தொடர வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு, இரவு பகலாக அங்கேயே தங்கி இன்று 13-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.