கடத்தூர்: தென்கரைக்கோட்டையில், சாலையோரம் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், தென்கரைக்கோட்டையில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சுற்றுவட்டார பகுதிகளில் இராமியணஅள்ளி, குருபரஅள்ளி, தாளநத்தம், ஜம்மணஅள்ளி, கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 50 மேற்பட்ட குக்கிராமங்கள் அமைந்துள்ளது. கிராமப்புறங்களில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், அரசு அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வெளிமாவட்டத்திற்க்கு செல்வதற்காக தென்கரைக்கோட்டை பஸ் ஸ்டாண்டிற்கு வருகின்றனர்.
மேலும், மருத்துவமனைகள், வணிக வளாக கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களது டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை சாலையோரம் நிறுத்தி செல்கின்றனர். இதனால் தர்மபுரி – பாப்பிரெட்டிபட்டி பிரதான சாலையில் காலை, மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, போலீசார் சாலையோரம் ஆக்கிரமித்து வாகன நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தென்கரைக்கோட்டையில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.