தென்காசி: தென்காசி அருள் தரும் ஸ்ரீ உலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவிலில் ஏப்ரல் மாதம் 7ம் தேதி நடைபெறும் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் இன்று (3ம் தேதி) காலை விமரிசையாக துவங்கியது. இதில் ஆதீனங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு இன்று காலையில் ராஜ அணுக்ஞை, பராக்கிரம பாண்டிய மன்னர் வழிபடுதல், விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்யம், பாத்ரபூஜை, தன பூஜை, கிராம தேவதானுக்ஞை, ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீ நவக்கிரக ஹோமம், ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம் திரவ்யாஹுதி, பிரம்மச்சாரி பூஜை, கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, பூர்ணாஹீதி, தீபாராதனை நடந்தது. இதில் கோவை பேரூராதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் கெளமார மடாலயம் ஸ்ரீலஸ்ரீகுமரகுருபர சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ முத்துசிவராமசாமி அடிகளார் ஆகியோர் இன்று காலை நடந்த பூஜையில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
அவர்களுக்கு ஆலய தலைமை அர்ச்சகர் செந்தில் ஆறுமுகம் பட்டர் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பூஜைகளை தூத்துக்குடி பாகம் பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கராராமேஸ்வரர் திருக்கோவில் பிரதான அர்ச்சகர் செல்வம் பட்டர் என்ற கல்யாணசுந்தர சிவாச்சாரியார், காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் தலைமை அர்ச்சகர் செந்தில் ஆறுமுகம் பட்டர், நெல்லை சாலை குமாரசாமி கோவில் கணேஷ் பட்டர், குற்றாலநாத சுவாமி திருக்கோவில் பிச்சுமணி என்ற கண்ணன் பட்டர், கடையநல்லூர் கருமாரியம்மன் கோவில் குமார் பட்டர், விக்னேஷ் சிவம் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தினர். இதில் அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் பொன்னி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முருகேசன், புவிதா, ஷீலாகுமார், மூக்கன், தொழிலதிபர்கள் அழகர்ராஜா, வெங்கடேஷ் ராஜா, முன்னாள் எம்எல்ஏ வெங்கட்ரமணா உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாளை 4ம் தேதி காலை 8 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமம், மூர்த்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம், அக்னிசங்கிரஹனம், யாகசாலை ஸ்தண்டிலம் அமைத்தல், 10.15 மணிக்கு விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது. மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அங்குரார்ப்பணம், ஆச்சார்ய ரக்க்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்சனம், யாத்ரா தானம், கடம் யாக சாலை பிரவேசம், முதற்கால யாகசாலை பூஜை 9 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாரதனை நடக்கிறது. 5 ம் தேதி காலை 8 மணிக்கு விசேஷ சந்தி, பூத சுத்தி, பாவனாபிஷேகம், இரண்டாம் கால யாகசாலை பூஜை, திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு மூன்றாம் காலயாக சாலை பூஜை, 9.30 மணிக்கு எந்திர ஸ்தாபனம், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.
6ம் தேதி காலை 8.30 மணிக்கு நான்காம் காலயாக சாலை பூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை, மாலை 6.05 மணிக்கு ஐந்தாம் காலயாக சாலை பூஜை, லட்சுமி பூஜை, பிம்பசுத்தி, மூர்த்தி ரக்க்ஷா பந்தனம் நடக்கிறது. கும்பாபிஷேக நாளான 7ம் தேதி அதிகாலை 3மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை, 4.30 மணிக்கு பரிவார யகசாலை, பூர்ணாஹுதி, 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், 6.05 மணிக்கு நாடி சந்தானம், ஸ்பர்சா ஹுதி, மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கடம் எழுந்தருளல் நடக்கிறது. தொடர்ந்து 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அருள் தரும் ஸ்ரீ உலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவில் ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடக்கிறது. 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை யாகசாலை பூஜை நேரங்களில் சதுர் வேத பாராயணம் மற்றும் திருமுறை பாராயணம் நடைபெறும். கும்பாபிஷேகத்தை தூத்துக்குடி பாகம் பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கராராமேஸ்வரர் திருக்கோவில் பிரதான அர்ச்சகர் செல்வம் பட்டர் என்ற கல்யாணசுந்தர சிவாச்சாரியார், காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் தலைமை அர்ச்சகர் செந்தில் ஆறுமுகம் பட்டர்,நெல்லை சாலை குமாரசாமி கோவில் கணேஷ் பட்டர், கடையநல்லூர் கருமாரியம்மன் கோவில் குமார் பட்டர், விக்னேஷ் சிவம் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தி வைக்கின்றனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் தங்கம், அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் பொன்னி, ஆய்வாளர் சரவணக்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முருகேசன், புவிதா, ஷீலாகுமார், மூக்கன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
The post தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா பூர்வாங்க பூஜைகளுடன் இன்று தொடக்கம்: ஆதீனங்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.