சென்னை: “தென்காசி மாவட்டத்தில் உள்ள தோரண மலை முருகன் கோயிலில் கிரிவலப்பாதை 3 மாதத்தில் அமைக்கப்படும்” என்று சட்டபேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
தமிழக சட்டபேரையில் கேள்வி நேரத்தின்போது மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., “தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட கடையம் ஒன்றியம், தோரணமலை முருகன் கோயிலில் கிரிவலப்பாதை அமைப்பதற்கு அரசு ஆவன செய்யுமா?” என்று கேள்வி எழுப்பினார்.