சியோல்: தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் கடந்த 3ம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது திடீரென அவசரநிலை ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார். அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. கடும் எதிர்ப்பலையை அடுத்து அந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றார். எனினும் அதிபரை பதவி நீக்கம் செய்யும் ஒரு தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தன. இதனை தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கு தேவையான பெரும்பான்மை வாக்குகள் பதிவானது.
இதனையடுத்து அதிபர் யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்வதற்கு ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. அதிபர் தனது பதிவயை ராஜினாமா செய்தார். புதிய அதிபர் பதவியேற்கும் அவரை அந்நாட்டின் பிரதமர் ஹான் டக் சூ பொறுப்பு அதிபராக செயல்படுவார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அதிபர் பதவி நீக்க தீர்மானம் வெற்றி பெற்றுள்ளதால் அவரை முறையாக பதவி நீக்கம் செய்வதா என்பதை முடிவெடுப்பதற்கு அரசியலமைப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் 6 மாதத்துக்குள் முடிவெடுத்து அறிவிப்பதற்கு நீதிமன்றத்துக்கு கால அவகாசம் உள்ளது.
The post தென்கொரிய அதிபர் பதவி நீக்கம் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம் appeared first on Dinakaran.