அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு கலந்தாய்வு கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: மத்திய அரசு தென்னிந்தியாவில் உள்ள ஹைதராபாத், அமராவதி, சென்னை, பெங்களூரு ஆகிய 4 தலைநகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டத்துக்கு சர்வே செய்ய உத்தரவு வழங்கி உள்ளது.
இதன் மூலம் 5 கோடி மக்கள் பயனடைவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முதற்கட்ட ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். இதன்படி இந்த புல்லட் ரயில் திட்டம் அமல் படுத்தப்பட்டால், சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு வெறும் 2 மணி நேரத்தில் சென்றடையலாம்.