கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் முதல் முறையாக தென் கொரியாவில் ராணுவ ஆட்சியை அறிவித்த அதிபர், நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஆனால் இந்த முடிவு, வெளிப்புற அச்சுறுத்தல்களால் தூண்டப்படவில்லை. மாறாக அவரது சொந்த அரசியல் பிரச்னைகளால் தூண்டப்பட்டது என்பது விரைவில் தெளிவாகியது.