சென்னை: குஜராத்தில் முதலீட்டாளர்களுக்கு வெளிப்படைத் தன்மை இருக்கும் என்றும், தென் மாநிலங்களுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும், அம்மாநில தொழில்நுட்பத் துறை செயலர் மோனா கே.காந்தர் தெரிவித்துள்ளார்.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு, குஜராத் மாநில அரசின் தொழில்நுட்பத் துறை சார்பில் ‘குஜராத் தகவல் தொழில்நுட்பக் கொள்கைகள் 2022 – 2027’ குறித்த கருத்தரங்கம் சென்னை கிண்டியில் இன்று நடைபெற்றது. கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் ஜி.எஸ்.கே.வேலு தலைமை வகித்தார். குஜராத் தொழில்நுட்பத் துறை செயலர் மோனா கே.காந்தர் பங்கேற்று, குஜராத்தின் தொழில்நுட்பக் கொள்கைகள் குறித்து விளக்கமளித்தார்.