ஜூபா: உள்நாட்டு போரில் சிக்கி தவிக்கும் தெற்கு சூடானின் துணை அதிபர் ரீக் மச்சாரின் வீட்டை ராணுவம் முற்றுகையிட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.தெற்கு சூடான் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரமாக நடந்து வருகிறது. உள்நாட்டு போரில் நாட்டில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் அவர்களுக்கு எதிராக துணை ராணுவம் போரிட்டு வருகிறது. இந்த சண்டையில் அப்பாவி மக்கள்,ராணு வீரர்கள் உட்பட 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் அதிபர் சல்வா கீர் மற்றும் துணை அதிபர் ரீக் மச்சாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலினால் 5 ஆண்டுகளுக்கு முன் உள்நாட்டு போர் மூண்டது.
நாட்டின் வடக்கு பகுதியில் தொடர்ந்து சண்டை நடந்து வரும் நிலையில், ரீக் மச்சாரின் ஆதரவாளரான துணை ராணுவ தளபதி கப்ரியேல் டூவோப் லாம் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். பெட்ரோலிய அமைச்சர் புவோட் காங் சோல்,அவரது குடும்பத்தினர் மற்றும் காவலாளிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த கைதுகளுக்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. துணை அதிபர் ரீக் மச்சாரின் ஆதரவு படை வடக்கு பகுதியில் உள்ள ராணுவ தளத்தை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், தலைநகர் ஜூபாவில் உள்ள துணை அதிபர் ரீக் மச்சாரின் வீட்டை ராணுவம் நேற்று முற்றுகையிட்டது.இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
The post தெற்கு சூடானில் பதற்றம்: துணை அதிபர் வீட்டை ராணுவம் முற்றுகை appeared first on Dinakaran.