ஜூபா: தெற்கு சூடானின் யூனிட்டி மாநிலத்தில் இன்று(ஜனவரி 29) ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 21 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். இந்த விபத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று(ஜனவரி 29) காலை யூனிட்டி ஆயில்ஃபீல்ட் விமான நிலையத்திலிருந்து தலைநகர் ஜூபாவுக்குப் சென்று கொண்டிருந்தபோது விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் கிரேட்டர் பயனீர் இயக்க நிறுவனத்தின் (GPOC) எண்ணெய் ஊழியர்கள் என கூறப்படுகிறது. இறந்தவர்களில் இரண்டு சீனர்கள் மற்றும் ஒரு இந்திய குடிமகன் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை. விபத்திற்கு பிறகு இறப்பு எண்ணிக்கை ஆரம்பத்தில் 18ஆக இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் பின்னர் மேலும் இரண்டு பேர் இறந்ததாக பிப்பல் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். அதே நேரத்தில், ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடானில் கடந்த சில ஆண்டுகளில் பல விமான விபத்துக்கள் நடந்துள்ளன. செப்டம்பர் 2018 இல், தலைநகர் ஜூபாவிலிருந்து யிரோல் நகருக்குப் பறந்து கொண்டிருந்த ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் உயிர் இழந்தனர். அதே நேரத்தில், 2015 ஆம் ஆண்டு, தலைநகர் ஜூபாவிலிருந்து பறந்து கொண்டிருந்தபோது ரஷ்ய தயாரிப்பான சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளானதில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர்.
The post தெற்கு சூடானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 20 பயணிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.