டெல்லி: தெற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும் எனவும், டிச.11ம் தேதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிசம்பர் 11 முதல் 15-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. சுமத்ரா தீவு அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை வானிலை ஆர்வலர்கள் கணித்துள்ளனர்.
ஏற்கனவே ஏரி குளங்கள் நிரம்பியுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறத. தொடர்ந்து டிசம்பர் 3-வது வாரத்தில் தென் சீனக்கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
The post தெற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.