சென்னை: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் சமநிலையை அச்சுறுத்தும் முயற்சிக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்பதை வலுப்படுத்துகிறது. இது வெறும் தொடக்கம்தான்; மேலும் பல மாநிலங்கள் இணையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் எதிர்காலத்தை நியாயமற்ற முறையில் வரையறுக்க அனுமதிக்க மாட்டோம் முதலமைச்சர் என்றும் கூறியுள்ளார்.
The post தெலுங்கானாவில் தீர்மானம் – முதலமைச்சர் வரவேற்பு appeared first on Dinakaran.