சென்னை: தமிழக சட்டப்பேரவையை அவமதித்ததுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். “தேசபக்தியை குத்தகைக்கு எடுத்தது போல ஆளுநர் பேசுகிறார்” என்றும் அமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவைக்கு வெளியே அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாரம்பரியமாக தமிழக சட்டப்பேரவையில் என்னென்ன நிகழ்வுகள் நடந்து வருகிறதோ, அதே நிகழ்வுகள் தான் தற்போதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதை மாற்ற வேண்டும் என்கிற முயற்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி இறங்குகிறார். அது நடக்காது என்ற காரணத்தினாலும், ஆளுநர் உரையை வாசித்தால் திமுகவின் சாதனைகளை வரிசையாக அடுக்க வேண்டும் என்கிற காரணத்தாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கக் கூடாது என்ற காரணத்தாலும் தான் அவர் இன்றைக்கு இ்வ்வாறு நடந்து கொண்டார்.